உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலிக்கம்ப நாயனார் குருபூஜை வழிபாடு

கலிக்கம்ப நாயனார் குருபூஜை வழிபாடு

திருப்பூர்: சிவனடியார் யாராக இருந்தாலும், எத்தகைய குலமாக இருந்தாலும், அவர்களை சிறப்பாக உபசரித்து, மகிழ்வுடன் அனுப்புவதை, கலிக்கம்ப நாயனார் செய்து வந்தார்.கடலுார் மாவட்டம் திருப்பெண்ணாகடம் பகுதியில் வாழ்ந்த அவர், வீட்டுக்கு வரும் சிவனடியாருக்கு பாதபூஜை செய்து, உணவளித்து உபசரிப்பதை விரதமாக செய்து வந்தார்.கலிக்கம்ப நாயனார், தை மாதம் ரேவதி நட்சத்திர நாளில், சிவனோடு கலந்தார்; அந்நாளில், குருபூஜை நடத்தப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, கலிக்கம்ப நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. அபிேஷகம், அலங்கார பூஜைகளை தொடர்ந்து, சிவனடியாரும், சிவாச்சார்யாரும், தேவாரம், திருவாசக பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !