கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சந்திர பிரபை தரிசன வைபவம்
ADDED :1378 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சந்திர பிரபை தரிசன வைபவம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், ரத சப்தமியையொட்டி, சந்திர பிரபை தரிசன வைபவம் நடத்தப்பட்டது. மகாபாரத வரலாற்றின் தத்துவப்படி, இவ்வைபவத்தினை நடத்தினர். மாலை 6:30 மணிக்கு பெருமாள் சமேத உபயநாச்சியார் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்தபின் உற்சவ மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். உலகநலன் வேண்டி பிரார்த்தனையும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார்.