உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசிமக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மாசிமக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வில்லியனுார் : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சியில், கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நேற்று காலை 10:30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 18ம் தேதி வரை விழா நடைபெறுகிறது முக்கிய விழாவாக, 11ம் தேதி பாரிவேட்டை, 15ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.16ம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் முதல்வர் ரங்கசாமி தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். 17ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. உறுவையாறு, மங்கலம், ஆரியூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊர்களின் கோவில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !