நாட்டரசன்கோட்டை மாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
நாட்டரசன்கோட்டை : நாட்டரசன்கோட்டை சிவகாமி சமேத கரிகால சோழீசர் ஆலயத்தில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நேற்று காலை கணபதி ேஹாமம், யாகசாலை பூஜைகள், விருஷப யாகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கொடியேற்றம், சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. சுவாமி, அம்பாள் காலை 9:00மணிக்கு கேடய வாகனத்திலும், இரவு 7:15 மணிக்கு பல்வேறு வாகனங்களில் கோயில் உட்பிரகார உற்ஸவம் நடக்கும். 6 ம் நாளான பிப்.,13 ல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். பிப்.,14 ல் ராஜகோபுர தரிசன பூஜை நடக்கும். பிப்.,18 அன்று தீர்த்தவாரி உற்ஸவத்துடன் மாசி திருவிழா நிறைவு பெறும். கண்காணிப்பாளர் சரவண கணேசன் முன்னிலை வகிக்க, ஆவிச்சி செட்டியார் வகையறா ஏற்பாட்டை செய்கின்றனர். பூஜைகளை கோயில் குருக்கள் மகாதேவன், கண்ணன், அய்யப்பன் செய்தனர்.