உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருப்பதியில் ரதசப்தமி விழா

தென் திருப்பதியில் ரதசப்தமி விழா

மேட்டுப்பாளையம்:  திருப்பதி கோவிலில், ரதசப்தமி விழா நடந்தது. இதில், 2 டேஸ் கொரோனா தடுப்பு ஊசி போட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி கோவிலில், மலையப்ப சுவாமி உள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும், ரதசப்தமி விழாவில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால், விழா மட்டும் நடந்தது. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நோய்த்தொற்று குறைந்ததால், இந்த ஆண்டு நடந்த ரதசப்தமி விழாவில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து, இரண்டு கொரோனா டோஸ் தடுப்பூசி போட்ட பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டது. 6:45 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா வந்தார். அதைத்தொடர்ந்து சேஷ வாகனம், அன்னப்பட்சி, அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். பிற்பகலில் தங்கரதமும், முத்துப்பந்தல் வாகனத்திலும், மாலையில் கருட வாகனம், சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !