உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி விஸ்வநாதர் கோயிலில் மாசிமக பெருவிழா துவக்கம்

தென்காசி விஸ்வநாதர் கோயிலில் மாசிமக பெருவிழா துவக்கம்

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென்காசி உலகம்மன் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடக்கிறது. இந்தாண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை,மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி அம்பாள் வீதி உலா நடக்கிறது. வரும் 16ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 17ம் தேதி மாசிமக பெருவிழா காலையில் தீர்த்தவாரி, மாலையில் புஷ்பாஞ்சலி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !