உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 கலச திருமஞ்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 கலச திருமஞ்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக இரண்டாம் திருநாளில் 108 கலச திருமஞ்சனம் சிறப்பாக நடந்தது.

இதனை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் 108 கலசங்களுடன் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !