திருவண்ணாமலை முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா
ADDED :1377 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த சோமாஸ்பாடி சுப்பிரமணியன் கோவிலில் தை கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. தை கிருத்திகைமுன்னிட்டு, வள்ளி தெய்வானையுடன் சமேதராய் சுப்பிரமணியன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெள்ளானந்தல் கிராமத்தில், மலை முருகன் கோவிலில் தை கிருத்திகை முன்னிட்டு, வள்ளி தெய்வானையுடன் சமேதராய் முருகர் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.