சபரிமலை நடை நாளை திறப்பு 13ம் தேதிக்கான முன்பதிவு முடிந்தது
ADDED :1375 days ago
சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின்னர் 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கும். 13ம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் பூஜைகள் தொடங்கும். 17–ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை , படிபூஜை நடைபெறும். 13 முதல் 17–ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13ம் தேதிக்கான முன்பதிவு முழுமையாக முடிந்துள்ளது. கோவிட் 19 இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட நெகட்டீவ்சான்றிதழுடன் செல்ல வேண்டும்.