நன்மை தருவார் கோயிலில் கேடயத்தில் சுவாமி திருவீதி உலா
ADDED :1697 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழாவில் இன்று சுவாமி, அம்மன் கேடயத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 1431 பசலி மாசி திருவிழா இன்று மூன்றாம் திருநாள் காலை கேடயத்தில் திருவீதி உலா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இறைவன் இறைவியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.