உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் தங்க கருட சேவை

திருக்கோஷ்டியூரில் தங்க கருட சேவை

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாரயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு பிப்.,15 காலையில் வெண்ணெய்த்தாழி சேவையும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் தெப்ப உத்ஸவம் நடைபெறும்.. பிப்.,7 ல் கொடியேற்றப்பட்டு உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நேற்று தங்க கருடச் சேவை நடைபெற்றது. சுவாமி தங்கக்கருடன் வாகனத்தில் திருவீதி வலம் வந்தார்.‛ மாசிக் கருடன் காசி போனாலும் கிடைக்காது’ என்று பக்தர்கள் திரளாக தரிசித்தனர். நாளை தங்கசேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். பிப்.,12 ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாறறுதலும்,பிப்.,13 ல் சூர்ணாபிேஷகமும், பிப்.,15 காலை 10:50 மணிக்கு பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் தெப்ப மண்டபம் எழுந்தருளி, முட்டுத்தள்ளுதல் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் காலையில் பகல் தெப்பமும், இரவில் தெப்பம் கண்டருளலும் நடைபெறும். பிப்.,17 ல் தீிர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !