வல்லப மகாகணபதி கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1434 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே வெ.கருங்களக்குறிச்சி கிராமத்தில் வல்லப மகாகணபதி கோயிலில் 3ம் வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்புயாக பூஜைகள் நடைபெற்ற பின்பு புனிதநீர் ஊற்றப்பட்டது.மூலவரான விநாயகருக்கு சந்தனம், குங்குமம், திருநீறு, பழங்கள், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.