திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி விழாவில் பரிவேட்டை
வில்லியனுார் : திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி திருவிழாவில் நேற்று பரிவேட்டை நடந்தது.வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இவ்வாண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய விழாவாக நேற்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9:00 மணியளவில் சந்திரசேகர மூர்த்தி, பல்லக்கில் மாட வீதியுலா, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.இரவு 7:00 மணியளவில் பஞ்சமூர்த்திக்கு மகா சோடச உபசார தீபாராதனை, இரவு 8:00 மணியளவில் சுவாமி அம்பாள் பரிவேட்டை மற்றும் மாட வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.வரும், 15ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 16ம் தேதி தேர் திருவிழா, முக்கிய நிகழ்வாக 17ம் தேதி காலை 7.30 மணியளவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் உற்சவதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.