வித்யா விஜய தீர்த்த சுவாமி அவிநாசி விஜயம்
ADDED :1443 days ago
அவிநாசி: அவிநாசிக்கு வருகை தந்த, வித்யா விஜய தீர்த்த சுவாமிக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், சோசலேவில் உள்ள வியாஸராஜ திருமடம் வித்யா விஜய தீர்த்த சுவாமி, நேற்று மாலை அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள, சுப்பையா சுவாமி திருமடத்துக்கு விஜயம் செய்தார். அவருக்கு, குரு க்ருபா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்றார்.அதன்பின், அவர் திருமடத்தில் பூஜைகள் மேற்கொண்டு. வியாஸராஜர் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினர். அதன்பின், அனைவருக்கும் அருளாசி வழங்கியவித்யா விஜய தீர்த்த சுவாமி, கோவைக்கு புறப்பட்டார்.இந்நிகழ்ச்சியில், குருக்ருபா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.