உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகரகோட்டாலம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

அகரகோட்டாலம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் மதுரை வீரன் அய்யனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7:00 மணியளவில், விநாயகர், முருகன், அய்யனார், முத்தையன், குள்ள கருப்பசாமி, செந்துரை, பாண்டவராயன், வீரனார், துாண்டி கருப்பசாமி, சங்கிலி கருப்பசாமி, முனியப்பன் சாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில், உதயசூரியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர் உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !