உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமத்தில் பூர்வீக தைப்பூச வழிபாடு

கிராமத்தில் பூர்வீக தைப்பூச வழிபாடு

உடுமலை: ராகல்பாவியில், தைப்பூச திருவிழாவை, 60 அடி உயர தேர் வரைந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உடுமலை அருகே ராகல்பாவியை பூர்வீகமாக கொண்ட மக்கள், பிற பகுதிகளில், பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், பூர்வீக கிராமத்தில், தைப்பூசத்தன்று ஒருங்கிணைந்து, சிறப்பாக வழிபாடு நடத்துவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, தைப்பூச விழா தாமதமாக நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள், பல வண்ண கோலப்பொடிகளால், 60 அடி நீளத்துக்கு தேர் வரைந்து, நடுவில், முருகப்பெருமானின், திரு உருவத்தை அலங்கரித்தனர். பின்னர் பொங்கல் வைத்து, ஊர்வலமாக மா விளக்கு எடுத்து வந்து, கும்மியடித்த பின்னர், சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.மக்கள் கூறுகையில் ராகல்பாவியை பூர்வீகமாக கொண்ட, நாங்கள், நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, தைப்பூச விழாவுக்காக, ஒன்று கூடி, வழிபாடு நடத்துகிறோம். இளைய தலைமுறையினருக்கும் இந்த பாரம்பரியம் குறித்து தெரியப்படுத்தி, தைப்பூச விழாக்களில், பங்கேற்கச்செய்கிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !