கடலுார் ராஜகோபால சுவாமிக்கு 10 ஆண்டுகளுக்கு பின் தீர்த்தவாரி
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாசிமக உற்சவம் நடக்கிறது.கடலுார், புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் திருப்பணி, ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடந்ததால் சுவாமிக்கு கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி 10 ஆண்டுகளாக நடத்தவில்லை. கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வரும் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு கடலுார், தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நடக்கும் மாசிமக உற்சவத்தில் திருவந்திபுரம்தேவநாத சுவாமி, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.8:30 மணிக்கு ராஜகோபால சுவாமி கோவிலில் நடக்கும் மாசிமக உற்சவத்தில் திருவந்திபுரம் தேவநாத பெருமாள், ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில்கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் ராஜா சரவணக் குமார், ராஜ ராஜேஸ்வரன், ஜி.ஆர்.கே., எஸ்டேட் துரைராஜ், பட்டாச்சாரியார்கள்பிரபு, நரசிம்மன், பிரகாஷ் செய்து வருகின்றனர்.