காரைக்காலில் வரதராஜப்பெருமாள் வெண்ணைத்தாழி சேவையில் வீதியுலா
காரைக்கால்: காரைக்காலில் வீழி வரதராஜப்பெருமாள் கோவிலில் மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு பெருமாள் வெண்ணைத்தாழி சேவையில் வீதியுலா நடந்தது.
காரைக்கால் திருமலைராஜன்பட்டினத்தில் வீழி வரதராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை விழா சிறப்பாக நடைபெறுகிறது.இதில் கடந்த 14ம் தேதி சூரிய பிறை, சந்திரபிறை வீதியுலா நடந்தது. இன்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வீழி வரதராஜப்பெருமாள் வெண்ணைத்தாழி சேவை வீதியுலா மற்றும் இரவு கருடவாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. நாளை வீழி வரதராஜப் பெருமாள் திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாளை எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி இரவு திருமஞ்சனம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாலகுரு,தனி அதிகாரி புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.