திருச்சுழி மாரியம்மன் கோயில் 1008 குத்து விளக்கு பூஜை
ADDED :1367 days ago
திருச்சுழி: திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடந்தது. நேற்று விழாவையொட்டி, 1008 திருவிளக்கு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.