மேல்மலையனுார் கோவிலில் ரூ.62.87 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :1367 days ago
அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 62 லட்சத்து 87 ஆயிரத்து 646 ரூபாய் உண்டியல் காணிக்கை இருந்தது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி, அறநிலையத் துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.அதில், 62 லட்சத்து 87 ஆயிரத்து 646 ரூபாயும், 346 கிராம் தங்க நகைகள், 840 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கைகயாக செலுத்தியிருந்தனர்.காணிக்கை எண்ணும் பணியின் போது, அறங்காவலர்கள் உடனிருந்தனர்.