உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஆசி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஆசி

மயிலாடுதுறை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாலை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தார். அப்போது இந்தியாவின் தொன்மை மிக்க ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சென்ற அண்ணாமலை அங்கு திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு குருமகாசன்னிதானம் அருள் பிரசாதங்களை வழங்கினார். முன்னதாக அவர் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியார் சிலையை பார்வையிட்டு, கோவில் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். நிகழ்வின்போது பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம், வக்கில் ராஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !