பரிமள ரெங்கநாதர் சமுத்திர தீர்த்தவாரி: பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை : திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் எழுந்தருள சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை திருவிழந்தூர் 108 திவ்ய தேசங்களில் 22வது தலமும், பஞ்ச அரங்கங்களில் ஒன்றானதுமான பரிமள ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள பரிமள ரெங்கநாதர் சுவாமி மாசி மகத்தை முன்னிட்டு பூம்புகாரில் காவிரி சங்கமிக்கும் இடத்தில் எழுந்தருள சமுத்திர தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு மாசி மகத்தை முன்னிட்டு பரிமல ரெங்கநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நேற்று மாலை கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இன்று பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் எழுந்தருளினார் அங்கு பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர் தொடர்ந்து காவிரி சங்கமிக்கும் கடலில் சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர் தீர்த்தவாரி முடிந்த பின்னர் பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு திரும்பினார்