உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமலிங்க சுவாமி கோயிலில் சித்தர்கள் பிரதிஷ்டை விழா

சோமலிங்க சுவாமி கோயிலில் சித்தர்கள் பிரதிஷ்டை விழா

 கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், 5 சித்தர்களின் பிரதிஷ்டை விழா நடந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கன்னிவாடி அருகே சோமலிங்கபுரத்தில் மெய்கண்ட சித்தர் குகையில் சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு, போகர், மெய்கண்ட சித்தர், குண்டலி சித்தர் வாலையானந்த சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோரின் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், 18 தீர்த்த குடங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. மகேஸ்வர பூஜை, சித்தர் ஆராதனைகளுடன் சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. ஓம்கார விநாயகர், மூலவர், பாலதண்டபாணி, வாலை சக்திக்கு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம், திருவாசக பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !