மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோயில் தேரோட்டம்
ADDED :1362 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோயில் மாசிப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட விழா நடந்தது.
மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நூற்றீஸ்வரர் பிரம்மோற்சவ திருவிழா கடந்த பிப். 8 ஆம் தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், ரிஷப, அன்ன, சிம்ம, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4.30 மணிக்கு நகரத்தார்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இன்று மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 8 மணிக்கி சப்தாவரணம் நடக்கும். விழா ஏற்பாடுகளை மாத்தூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.