உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காஞ்சி கோவிலில் மாசிமக தேர் திருவிழா

திருக்காஞ்சி கோவிலில் மாசிமக தேர் திருவிழா

வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டத்தை அமைச்சர் தேனீ ஜெயகுமார் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 8ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 11ம் தேதி பாரிவேட்டை, 15ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.தாசில்தார் கார்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், முன்னாள் சேர்மன் பாலமுருகன் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மாட வீதிகள் வழியாக சென்று பகல் 12:15 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.இன்று(17ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதில் உறுவையாறு, மங்கலம், ஆரியூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊர்களின் கோவில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !