உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்திக்குப்பத்தில் மாசிமக தீர்த்தவாரி

வைத்திக்குப்பத்தில் மாசிமக தீர்த்தவாரி

புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரியில் எழுந்தருளிய உற்சவர்களை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் மாசி மாத மகத்தன்று, கோவில்களில் உள்ள உற்சவமூர்த்திகளை கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி நடத்துவது வழக்கம்.


அதன்படி, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதையொட்டி, கடற்கரையில் நீண்ட பந்தல் அமைக்கப் பட்டிருந்தது.கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டிற்கு பின் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்திற்கு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன், செஞ்சி அரங்கநாதர், திண்டிவனம் சீனிவாச பெருமாள், மயிலம் முருகர், தீவனுார் விநாயகர், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர், காந்தி வீதி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், லாஸ்பேட்டை சிவ சுப்பிரமணியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவர்கள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர்.சுவாமிகளுக்கு தீர்த்தவாரி செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்தனர். பலர் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர், மோர் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலமும், கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து போலீசாரும் கண்காணித்தனர்.இதேபோன்று வீராம்பட்டினம், காலாப்பட்டு கடற்கரைகளிலும், வில்லியனுார் சங்கராபரணி ஆறு, பாகூரில் தென்பெண்ணை ஆறு ஆகிய இடங்களிலும் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது.கவர்னர் தரிசனம்கவர்னர் தமிழிசை நேற்று பகல் 12:30 மணி அளவில், வைத்திக்குப்பம் கடற்கரைக்கு வருகை தந்தார். கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய பல்வேறு கோவில் உற்சவர்களை வணங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !