குமாரப்பாளையத்தில் மாசிமக தீர்த்தவாரி
ADDED :1362 days ago
திருக்கனுார்: குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள எல்லை காளியம்மன் கோவில் வளாகத்தில் மாசிமக தீர்த்தவாரி விழா நேற்று நடந்ததுதீர்த்தவாரியில் குமாரப்பாளையம், பிடாரிப்பட்டு, மணவெளி, டி. புதுக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.