உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா

முனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா

குன்னூர்: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு பிரிவில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் ஆண்டு திருவிழா நடந்தது. அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் லெப். கர்னல் கிரிஷி ஷிண்டே, ஜூனியர் பிரிவு சீனிவாசன் ஆகியோர் கொடியேற்றினர். விழாவில் அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடந்த அன்னதானத்தை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் ராகேஷ் சிங் துவக்கி வைத்தார். உதவி பொதுமேலாளர் பாலசுப்ரமணியம் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாதுகாப்பு பிரிவு தர்வான்கள், கன்ட்ரோல் ரூம் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !