ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1361 days ago
புதுச்சேரி: திண்டிவனம் நல்லியக் கோடன் நகர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நேற்று புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.வைத்திக்குப்பத்தில் நேற்று முன்தினம் நடந்த மாசி மக தீர்த்தவாரியில், திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் உள்ள அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உற்சவர் எழுந்தருளினார்.இரவு அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியார் மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.நேற்று காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை சேஷவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.