துறைமுகத்தில் தெப்போற்சவம்
ADDED :1362 days ago
கடலுார்: மாசிமகத்தையொட்டி, கடலுார் துறைமுக உப்பனாற்றில் சுவாமிகளுக்கு தெப்போற்சவம் நடந்தது.மாசி மகத்தையொட்டி சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், ஆற்றங்கரை தெரு ஏழை மாரியம்மன், சோனாங்குப்பம் வெங்கடேச பெருமாள், சலங்கைக்கார தெரு நாகமுத்தாலம்மன், அக்கரைகோரி கண்ணுார் மாரியம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, நேற்று காலை சிங்காரத்தோப்பு கடற்கரையில் எழுந்தருள செய்து, தீர்த்தவாரி நடந்தது.இரவு சுவாமிகள் படகுகளில் எழுந்தருள செய்து, கடலுார் துறைமுக மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ள உப்பனாற்றில் தெப்போற்சவம் நடந்தது.