உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் ரத்தினவேலிற்கு மகேஸ்வர பூஜை

தேவகோட்டையில் ரத்தினவேலிற்கு மகேஸ்வர பூஜை

தேவகோட்டை : மாசிமகத்தை முன்னிட்டு குன்றக்குடியில் இருந்து வைரக்கற்கள் பொறிக்கப்பட்ட ரத்தினவேல் தேவகோட்டை கொண்டு வரப்பட்டது. சிவன் கோயிலில் ரத்தினவேல் வெளியில் எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ( தேவகோட்டையில் மட்டும் தான் வேல் முழுவதும் வெளியில் எடுக்கப்படும் ) பூஜைகளை தொடர்ந்து குப்பான் செட்டியார் வேலை ஊர்வலமாக எடுத்து வந்தார். வழியில் பக்தர்கள் பன்னீரால் பூஜை செய்து வழிபட்டனர். ரத்தினவேல் நகரப்பள்ளிக்கூடத்தில் உள்ள முருகன் கையில் அணிவிக்கப்பட்டு , 16 மூடை அரிசி யால் வடிக்கப்பட்ட சாதத்துடன் அறுவை உணவு தயாரிக்கப்பட்டு படையல் செய்து மகேஸ்வர பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ரத்தினவேல் வெளியில் எடுக்கப்பட்டால் 16 மூடை அரிசி உணவு சமைக்க வேண்டும் என்ற ஐதீகத்தின்படி உணவு சமைக்க ப்பட்டு உணவு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !