தேவதானத்தில் 3 ஆண்டுக்கு பின் தபசு காட்சி
ADDED :1362 days ago
தளவாய்புரம் : தேவதானம் தவம் பெற்ற நயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பின் நடந்த தபசு காட்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் மாசி மகம் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவால் விழா நடக்கவில்லை . இந்தாண்டு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தபசு காட்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தவம் பெற்ற நயகி அம்மன், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிகளை மூன்று முறை வலம் வர சுவாமி பிரியாவிடையுடன் அம்மனுக்கு காட்சியளித்தார். ஒரே நேரத்தில் சுவாமிகளுக்கு தீபாராதனை, மாலை மாற்றுதல், வஸ்திரம் சாத்துதல் உள்ளிட்ட சடங்குகள் நடந்தன.மூன்று ஆண்டுகளுக்கு பின் நடந்த இதில் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.