உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுாரில் மாசிமக தீர்த்தவாரி 2ம் நாளாக குவிந்த மக்கள்

கடலுாரில் மாசிமக தீர்த்தவாரி 2ம் நாளாக குவிந்த மக்கள்

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம், பச்சையாங்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.கடலுார் தேவனாம்பட்டினம் மற்றும் முதுநகர் பச்சையாங்குப்பம் உப்பனாற்று கரையில் மாசிமக தீர்த்தவாரி இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. நேற்று முன்தினம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி, புதுப்பாளையம் ராஜகோபாலசாமி, திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளினர்.இரண்டாம் நாளான நேற்றும் 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சாமிகள் எழுந்தருள செய்து தீர்த்தவாரி நடந்தது. முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் உப்பனாற்றில் செம்மங்குப்பம், குடிகாடு, காரைக்காடு, ஈச்சங்காடு, சங்கொலிகுப்பம், மாலுமியார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருள செய்து தீர்த்தவாரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !