கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண அலங்கார மண்டப ஒவியம் திறப்பு
காரைக்கால்: காரைக்காலில் கைலாசநாதர் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மீனாட்சி திருக்கல்யாண வைபவ அலங்கார மண்டப ஒவியம் திறக்கப்பட்டது.
காரைக்கால் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மிகவிமர்ச்சியாக பிரும்மோற்சவத்திருவிழா நடைபெறும். இக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மீனாட்சி திருக்கல்யாண வைபவ சுதை வடிவம் சுவாமிகள் அலங்கார மண்டப சுவற்றில் ஓவியமாக வரையப்பட்டது.பணிகள் முடிக்கப்பட்டு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஓவியம் திறக்கப்பட்டது. இதற்காக காலை யாக பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து கலச நீர் ஆலயத்தை சுற்றிவந்து வைபவ அலங்கார மண்டபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் மகா தீபாரதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் அரங்காவலர் வாரியத் தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம்,பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன்,ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலய அர்த்தஜாம வழிபாடு மன்ற நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,மரகதவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.