உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்த சேவை: காரமடை அரங்கநாதர் கோவிலில் தீப்பந்தம் எடுத்து நேர்த்திகடன்

பந்த சேவை: காரமடை அரங்கநாதர் கோவிலில் தீப்பந்தம் எடுத்து நேர்த்திகடன்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நடந்த பந்த சேவை விழாவில், ஏராளமான பக்தர்கள் தீப்பந்தங்களை எடுத்து வந்து, நேர்த்தி கடனை செலுத்தினர்.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாசிமகத் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்துக்கு அடுத்த நாள், பந்த சேவை விழா நடைபெறும். இவ்விழாவில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களை விட, இரண்டு மடங்கு பக்தர்கள் அதிகமாக பங்கேற்பர். நேற்று நடந்த பந்த சேவை விழாவில், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய, 3 மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தீப்பந்தங்களை எடுத்து வந்தனர். இவர்கள் காரமடையில், தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் வழியாக, மேள தாளம் முழங்க, கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஆடி வந்து, கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !