உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலை ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் 11ல் கோலாகல ஆரம்பம்

சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலை ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் 11ல் கோலாகல ஆரம்பம்

சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலை ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேக விழா, மார்ச் 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலை ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேக விழா, மார்ச் 11, காலை 6:00 மணிக்கு மங்கள இசை , கணபதி ஹோமம், சக்ர மே ரு பூஜை , பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் துவங்குகிறது. 9:00 மணிக்கு சக்தி கொடியேற்றம், காப்பு கட்டுதல், பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு கங்கா பூஜை , புனித நீர், முளை ப்பாரிகை, புற்று மண், மேள வாத்தியங்களுடன் நடக்கிறது. 6:00 மணிக்கு சாந்தி பூஜை , இரவு, 7:00 மணிக்கு யாக சாலை சக்தி பூஜை , 7:30 மணிக்கு யாக சாலை பிரவேசம், சிவாச்சாரியர்கள் வருகை , 8:00 மணிக்கு முதல் கால வேள்வி ஆரம்பம், 9:00 மணிக்கு மஹாபூர்ணாஹுதி, தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. மார்ச் 12, காலை 7:30 மணிக்கு கணபதி வழிபாடு, பிரத்தியங்கிரா மூலமந்திர ஹோமம், 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி ஆரம்பம், தீபாராதனை, பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. 8:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி ஆரம்பம், தீபாராதனை, பிரசாதம் வினியகிக்கப்படுகிறது. மார்ச் 13, காலை 6:00 மணிக்கு மங்கள இசை , நான்காம் கால வேள்வி ஆரம்பம், 8:00 மணிக்கு கலச குடங்கள் புறப்பாடு, யாக சாலை வலம் வருதல், பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. 8:30 மணிக்கு கோபுர கலச பூஜை மற்றும் கோபுர கலச மஹா கும்பாபிஷேகம் சந்திரமஹா ஹோரையில் நடக்கிறது. 10:00 மணிக்கு ஓம் சக்தி மற்றும் பிரத்தியங்கிரா தேவி ஆலய ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கும்ப லக்கினத்தில் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 3:00 மணிக்கு 1,008 சுமங்கலி பூஜை , திருவிளக்கு பூஜை , தீபாராதனை, பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. கும்பாபிஷேகவிழாவை ஒட்டி, நாளை (20ம் தேதி) கோவிலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !