உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருவிழாவுடன் களைகட்டிய தேர்தல் திருவிழா

கோவில் திருவிழாவுடன் களைகட்டிய தேர்தல் திருவிழா

அவிநாசி: திருமுருகள் பூண்டியில் கோவில் திருவிழாவுடன்,தேர்தல் திருவிழாவும் இணைந்ததால், களைகட்டியது.

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாலை, தெப்பத்தேர் நடக்க இருந்த நிலையில், தேர்தல் ஓட்டுப்பதிவும் நடந்தது. அனைத்து ஓட்டுச்சாவடியிலும், வாக்காளர்கள் நிறைந்திருந்தனர். குறிப்பாக, அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில், கூட்டம் அதிகளவில் இருந்தது. பூண்டியில், கோவில் விழாவுக்கு வந்த பக்தர்கள் ஒருபுறம், அருகேயுள்ள ஓட்டுச்சாவடிக்கு ஓட்டளிக்க சென்ற பக்தர்கள் இன்னொரு புறம் என, அப்பகுதி முழக்க விழாக் கோலம் பூண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !