பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :1364 days ago
புதுச்சேரி : தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு நேற்று புதுச்சேரியில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.திண்டிவனம் அடுத்த தீவனுாரில் உள்ள பொய்யாமொழி விநாயகர், கடந்த 16ம் தேதி, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, புது சாரம் நடுத்தெருவில் அமைந்துள்ள சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் மண்டகப்படி ஆகியுள்ளார். அங்கு, அவருக்கு சாரம், மாசி மக வரவேற்பு குழு சார்பில் நேற்று காலை கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இன்று 20ம் தேதி காலை 8:00 மணிக்கு பொய்யா மொழி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, வழியனுப்பு விழா நடக்கிறது.