கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருட்டு
ADDED :1364 days ago
திருப்பத்துார்: ஆம்பூர் அருகே, கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே, தேவலாபுரத்தில், வரசித்தி வினாயகர் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு தர்மகர்த்தா ஏகநாதன், வீட்டுக்கு சென்றார். இன்று காலை 8:00 மணிக்கு கோவிலை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தில் உண்டியலை காணவில்லை. உம்மராபாத் போலீசார் தேவலாபுரம் ஆற்றில் இருந்த உண்டியலை மட்டும் மீட்டனர். மர்ம நபர்கள் உண்டிலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக் கொண்டு ஆற்றில் வீசி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.