உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

புதுச்சத்திரம், : பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு ரகுமாயி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவம், இரவு 10.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !