காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழா முன்னிட்டு நேற்று பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழாவில் விநாயகர்,சுப்ரமணியர்,கயிலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரவேதர்கள் புறப்பாடு நடைபெறும். இன்று பந்தகால் முகூர்த்தம் நடந்தது. முன்னதாக ஆலய சிவாச்சாரியர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து ஆலயத்தை சூற்றி வலம் வந்து நுழைவு வாயிலில் பந்தகால் நடப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் மார்ச் 8தேதி கொடியேற்றுதல், 17ம் தேதி தேர்திருவிழா, 20ம் தேதி தெப்பத்திருவிழா, 21ம் தேதி அம்மையார் ஐக்கிய விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,அறங்காவலர் வாரியத்தலைவர் கேசவன்,துணைத்தலைவர் ஆறுமுகம்,செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் மற்றும் பிரம்மோற்சவ விழா உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.