9 அடி உயர ஆதிசக்தி சமேத ஆதிபரமேஸ்வர் சிலை பிரதிஷ்டை
ADDED :1366 days ago
கோவை: வெள்ளலூர் ஆறுபடை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவ சமேத ஸ்ரீ சூரிய நாராயணர் கோவில், ஆதி சக்தி மற்றும் ஆதி பரமேஸ்வரர் ஜுர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. 2020 ஆண்டு கட்டப்பட்ட இக்கோவிலில் மூலவராக ஸ்ரீ பகவான் சூரிய நாராயணர் உள்ளார். தற்போது இத்தலத்தில் 9 அடி உயரமுள்ள ஆதிசக்தி மற்றும் ஆதிபரமேஸ்வர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அனைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 1000 திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.கோவை நகரில் சிவ- பார்வதி சமேதராய் கருவறையில் அலங்கரிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.