திருமலைக்கேணியில் சங்கடகர சதுர்த்தி பூஜை
ADDED :1695 days ago
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. இதில் வினாயகருக்கு அருகம்புல், எருக்கம் பூ உள்ளிட்ட பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவித்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி சக்தி வினாயகர் கோவில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியிலும் சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது.