உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லபை ஐயப்பன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

வல்லபை ஐயப்பன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பஜனைகள் நடந்தது. ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதப் பெருமான், பாம்பன் குமரகுருதாச சுவாமி கோயிலில் உள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !