புவனகிரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1439 days ago
புவனகிரி : கீழ்புவனகிரி குயவர் நகரில் ஆபத்தை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழாவையொட்டி கடந்த 18 ம் தேதி மாலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை துவங்கியது.
19ம் தேதி காலை7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. காலை 11.00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 5.00 மணிக்கு வாஸ்துசாந்தி, முதல் யாகசாலை பூஜை நடந்தது. இரவு 8.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 8.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, காலை 8.15 மணிக்கு கடம் புறப்பாடு துவங்கியது. பின்னர் விமானத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.