உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு 1.5 கிலோ தங்கம்

திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு 1.5 கிலோ தங்கம்

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் விமானத்திற்கு தங்க தகடு பொருத்த தமிழ்நாடு ஆண்டாள் பேரவை சார்பில் 1.600 கிலோ தங்கம் வழங்கப்பட்டது.

108 வைணவ தலங்களில் மதுரை கூடழலகர் கோயில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மட்டுமே அஷ்டாங்க விமானம் உண்டு. ஓம் நமோ நாராயணாய என்ற மந்திர வடிவாக விமானம் அமைத்துள்ளனர்.திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் விமானத்திற்கு அறநிலைய துறை சார்பில் 77 கிலோவில் தங்க தகடு பொருத்த முடிவு செய்தது. இதற்காக விமான சுதைகளில் தாமிர தகடு வேயும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் தங்கதகடு வேயும் பணி தொடங்க உள்ளன. இது வரை 20 கிலோ தங்கம் உபயதாரர்களால் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆண்டாள் பேரவையினர் சார்பில் முதற்கட்டமாக ஆண்டாள் சொக்கலிங்கம் 1.58 கிலோ தங்கம் கொடுத்து துவக்கி வைத்தார். நேற்று பேரவை தலைவர் நாகராஜன், மாநில செயலாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் சாய்சிவா ஆகியோர் டிரஸ்ட் தலைவர் ஜெயராமன், துணை தலைவர் காந்தி, முன்னாள் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் தேவஸ்தான நிர்வாகிகளிடம் 1.600 கிலோ தங்கம் வழங்கினர். தொடர்ந்து கோயிலுக்கு கோ தானமும் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !