உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனியம்மன் கோவிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு

கோனியம்மன் கோவிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு

கோவை: கோவை கோனியம்மன் கோவிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

கோனியம்மன் தேர்திருவிழா கடந்த, 14ம் தேதி, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். திருவிழாவையொட்டி பூ கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !