உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் ரூ. 100 கோடியில் 108 அடி உயர அனுமன் சிலை

ராமேஸ்வரத்தில் ரூ. 100 கோடியில் 108 அடி உயர அனுமன் சிலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.


ஸ்ரீ ஹரிஷ் சந்தர் நந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ராமேஸ்வரம் ஓலைகுடாவில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க அறக்கட்டளை நிர்வாகி நிகில் நந்தா, ஆர்.எஸ்.எஸ்., தேசிய பொது செயலாளர் தத்தாத்ரேயா கோஸ்பலே, யு.பி.எஸ்.சி., முன்னாள் செயலாளர் சவுபே, பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், அறக்கட்டளை நிர்வாகிகள் அடிக்கல் நாட்டினர். தத்தாத்ரேயா கூறியதாவது: ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை அமைக்கும் பணி 2024ல் முடிவடையும். பக்தர்கள் வருகை அதிகரித்து, ஆன்மிகம் மேம்படும் என்றார்.நிகில் நந்தா கூறியதாவது: சிம்லா, குஜராத் மோர்பி ஆகிய இடங்களில் பிரம்மாண்ட அனுமன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் ரூ.100 கோடி செலவில் 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதி உலகின் தலைசிறந்த புனித நகரமாக மாறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !