உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை, 9:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து காலை 10:10 மணியளவில் சுப்ரமணிய சுவாமி மற்றும் வளாகத்தில் உள்ள பால விநாயகர், பால முருகன், பால ஐயப்பன், காசி விஸ்வநாதர், திருப்பதி வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், பாதாள பைரவி, மாரியம்மன், பொம்மியம்மன், மதுரை வீரன் ஆகிய சன்னதி கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாகி எத்திராசு தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கஸ்துாரி பாண்டியன், கிராம முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !