உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்

அக்னி கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்

கோவை : கோனியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னிக்கம்பம் அமைத்து கொடியேற்றும் விழாவை தொடர்ந்து, கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த பிப்.,14ல் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. பிப்., 22ல் கொடியேற்று மற்றும் அக்னிக்கம்பம் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு, அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டு பெரியகடைவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர்வீதி, ராஜவீதி தேர்நிலைத்திடலை தொடர்ந்து பெரியகடைவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. வழிநெடுக வீட்டு வாசலில், பக்தர்கள் அம்மனுக்கு மங்கலப்பொருட்கள் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.சுமங்கலி பெண்கள் நேர்த்திக்கடனுக்காக குடங்களில் தண்ணீர் பிடித்து அக்னிக்கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தனர். சிலர் அம்மனுக்கு உப்பு மிளகு சமர்ப்பித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !